எங்களின் Born with தகர spoon (Podcast)வலையொலியின் ஒரு அங்கமாக துவங்கப்பட்டதுதான் இந்த வலைப்பதிவு தளம். எங்கள் (Podcast)வலையொலியில், ஒன்று இரண்டேனும் கேட்டிருந்தால் நாங்கள் யார் என்றும் தெரியும், இங்கு நன்றாய் தொடர்புபடுத்திக்கொள்ளவும் முடியும். (இதுவரை கேட்டிராவிட்டாலும் பெரிதாய் ஒன்றும் பாதகம் இல்லை, இப்போதே இங்கு போய் கேளுங்கள்). Born With தகர Spoon
யார் நாங்கள்? கதை சொல்லிகள், கணவுகாண்பவர்கள், சரியாகச் சொல்லப்போனால் கடைந்தெடுத்த கத்துக்குட்டிகள். கட்டிய மனைவியிடம் கை கட்டி நிற்கும் கணவர்களூம், கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மசாரிகளும் சேர்ந்த கலவையான ஒரு குழு.
நாங்கள் இங்கு கூறப்போவது பலவகை கதைகளும், கட்டுரைகளும், சில பல கருத்துக்களும்தான். அவற்றின் மூலம் உங்களை மகிழ்விக்க, சிரிக்க வைக்க, சிந்திக்க வைக்க, ஏன் சில சமயம் வெறுப்பேற்றவும் கூட முயற்சி செய்ய போகிறோம். கொஞ்சம் நேரம் ஒதுக்கி படித்துத்தான் பாருங்களேன். உங்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி, ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கவே இந்த வலைபதிவு தளம்.
இதில் வாசகர்களாகிய நீங்களும் உரையாடலில் சேரவும், கருத்துக்களை பகிரவும், உங்களின் கதைகளையும் கட்டுரைகளையும் தாராளமாய் சமர்பித்து, உங்கள் பங்களிப்பை தரவும் வேண்டுகிறோம்.
சுருக்கமாக சொன்னால், எங்கள் புலம்பல்களை கேட்க வந்த உங்களை பூக்கள் தூவி வரவேற்கிறோம். . .


0 comments:
Post a Comment