காலை 10 மணி, வேறு வழியில்லாமல் வெயிலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு ஃபோன். ஸ்பெரோ மதுரைக்கு வந்திருப்பதாகவும், உடனே சென்று பார்க்கும் படியும் ஈகிலிடமிருந்து அன்புக்கட்டளை.
மீற முடியாமல் உடனே போய் பார்த்தால், ஒரு அதிர்ச்சி. தனது வலது கையை தொட்டிலில் போட்டு, குழந்தையை பேனும் தாய் போல, அமைதி அரும்பிய சிரிப்புடன் அமர்ந்திருந்தார். பெங்களூருவில் ஒரு விபத்தை சந்தித்து, இப்போது மெது மெதுவாக நலம் பெற்று வருகிறார்.
